சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் கண்டுபிடிப்பு

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவ்வும் அவற்றின் பெறுமதி 700 கோடி ரூபாவை தாண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்த வாகனங்கள் பல்வேறு சட்டவிரோதமான முறைகள் மூலம் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை தற்போது பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட உள்ளது.

உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!