கார்த்திகை 2023

கோப் குழுவின் நிலையியற் கட்டளையின் பிரகாரமே அதன் தலைவரின் மகன் பங்கேற்றுள்ளார்

நிலையியற் கட்டளையின் பிரகாரமே அதன் தலைவரின் மகன் கோப் குழுவில் பங்குபற்றியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (16) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற COPE குழுவில் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கலந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். கோப் தலைவரின் மகனுக்கு COPE குழுவில் அமருவதற்கான உரிமை என்ன …

கோப் குழுவின் நிலையியற் கட்டளையின் பிரகாரமே அதன் தலைவரின் மகன் பங்கேற்றுள்ளார் Read More »

வங்குரோத்து நிலையை அறிவித்த வழங்குநர் சுகாதார அமைச்சின் மற்றுமொரு நிறுவனத்தின் வழங்குநராக செயற்படுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?

அங்கொட தேசிய மனநல நிறுவனத்தினால் மேலதிகமாக செலுத்தப்பட்ட பணத்தை, வங்குரோத்து நிலையைக் கூறி மீளச் செலுத்த மறுத்த உணவு வழங்குநர், சுகாதார அமைச்சின் மற்றுமொரு நிறுவனத்தின் வழங்குநராக செயற்படுவது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவில் புலப்பட்டது. கொள்வனவுக் குழுவின் தீர்மானங்களை முறையாக உடன்படிக்கை நிபந்தனைகளில் சேர்த்துக்கொள்ளாமை காரணமாக சம்பந்தப்பட்ட வழங்குநரிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்வது சிக்கலாகியுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், வங்குரோத்து நிலையை அறிவித்த வழங்குநர் ஒருவர் சுகாதார அமைச்சின் …

வங்குரோத்து நிலையை அறிவித்த வழங்குநர் சுகாதார அமைச்சின் மற்றுமொரு நிறுவனத்தின் வழங்குநராக செயற்படுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ? Read More »

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள் வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 11.30 மணியளவில், விசாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கே 470 கிலோ மீட்டர் நிலைக் கொண்டிருந்தது. அது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய …

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி Read More »

குறைந்த சம்பளத்திற்கு அடிமைகள் போன்று பணிபுரியும் உள்ளூர் வீட்டு வேலையாட்கள்…..

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள வீட்டுப் பணிப்பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூக்குரலிடும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இருந்த போதிலும், குறைந்த சம்பளத்திற்கு அடிமைகள் போன்று பணிபுரியும் உள்ளூர் வீட்டு வேலையாட்கள் தொடர்பில் குரல் எழுப்புவதில்லை. இதற்கான தீர்வை வழங்கி அவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்பபடுத்தப்படுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். முறைசாரா ஊழியர்களுக்கு தொழில் கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதற்காக ‘கரு சரு’ வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுப்பணிப்பெண்களுடன் இன்று (15) நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் …

குறைந்த சம்பளத்திற்கு அடிமைகள் போன்று பணிபுரியும் உள்ளூர் வீட்டு வேலையாட்கள்….. Read More »

பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்த குழுவின் அறிக்கை

2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவினால் (14) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டயானா கமகே, கௌரவ ரோஹன பண்டார, கௌரவ சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை …

பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்த குழுவின் அறிக்கை Read More »

வடக்கு மாகாணத்தில் 50மி.மீக்கும் அதிகமான மழை

2023 நவம்பர்16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர்16ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் …

வடக்கு மாகாணத்தில் 50மி.மீக்கும் அதிகமான மழை Read More »

மனிதாபிமான உதவிகளுக்காக ஒருசில பகுதிகளில் 4 மணி நேரம் போர் நிறுத்தம்  –  இஸ்ரேல் இணக்கம்

மனிதாபிமான உதவிகளுக்காக ஒருசில பகுதிகளில் 4 மணி நேரம் போரை நிறுத்த  இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்களை பினைக் கைதிகளாக சிறைபிடித்துச்சென்றனர். அதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்போம் என்ற உறுதியுடன்  இஸ்ரேல்  போரிட்டு வருகிறது. காசாவில் போர் தீவிரம் அடைந்துள்ளது. இந் நிலையில்,  4 ஆயிரம் குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து …

மனிதாபிமான உதவிகளுக்காக ஒருசில பகுதிகளில் 4 மணி நேரம் போர் நிறுத்தம்  –  இஸ்ரேல் இணக்கம் Read More »