News

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணையில் தாமதம்….

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக, மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புக்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் குழு தீர்மானித்தது. சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ தலதா …

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணையில் தாமதம்…. Read More »

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு விசேட குழு நியமனம்

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பான சட்ட மூலத்தின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரருடன் இணைந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.  ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (01) கூடிய போது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) பிரதிநிதியால் சட்ட மூலம் தொடர்பில் முன்வைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்ட …

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு விசேட குழு நியமனம் Read More »

பொசன்பௌர்ணமியை முன்னிட்டு இந்தியாவின் பௌத்தமரபு குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சி

 ஹோமாகம பொசன் வலயத்தின் ஓர் அங்கமாக, இந்தியாவின் பௌத்த மரபினை சித்தரிக்கும் விசேட கண்காட்சி ஒன்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் 2023 ஜூன் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியானது இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களின் பிரசன்னத்துக்கு மத்தியில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 2.    இந்தக் கண்காட்சியில் இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேசத்தின் தாமேக் தூபி, பீஹாரிலுள்ள …

பொசன்பௌர்ணமியை முன்னிட்டு இந்தியாவின் பௌத்தமரபு குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சி Read More »

டயனா கமகேவின் எம்.பி பதவி மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் திருமதி டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜை என்று கூறப்படும் டயனா கமகேவிற்கு இலங்கை குடியுரிமைக்கான அந்தஸ்த்து இல்லை என்றும்  இதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கு மாறு சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட  நீதிப்பேராணை விண்ணப்ப மனு …

டயனா கமகேவின் எம்.பி பதவி மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு Read More »

கம்பளை பிரதேசத்தில் நிலஅதிர்வு

கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு 10.49 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. சுமார் 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் மஹகனதராவ, ஹக்மன, பல்லேகல, புத்தங்கல ஆகிய பகுதிகளில் இதுபதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. புபுரஸ்ஸ பிரதேசம் இதன் கேந்திரமாக அமைதுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம்  மேலும் தெரிவித்துள்ளது.

பொலித்தீன் , பிளாஸ்டிக்  விற்பனைக்கு எதிராக நடவடிக்கை

நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் இடங்களை முற்றுகையிடுவதற்கான  நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடம் முதல் தடை செய்யப்பட்டுள்ள இந்த பொருட்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு இன்று முதல் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரன தெரிவித்துள்ளார்

டயனா கமகேவின் எம்.பி பதவி மீதான தீர்ப்பு இன்று

பிரிட்டன் பிரஜாவுரிமை பெற்றுள்ளதாக கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்படவுள்ளது. பிரித்தானிய பிரஜை என்று கூறப்படும் டயனா கமகேவிற்கு இலங்கை குடியுரிமைக்கான அந்தஸ்த்து இல்லை. இதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியற்றதாக்கு மாறு சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட  (Writ Petition …

டயனா கமகேவின் எம்.பி பதவி மீதான தீர்ப்பு இன்று Read More »

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் போசாக்கின்மையால் பாதிப்பு

இலங்கையில் சிறுவர்களின் உயரத்திற்கு அமைவாக உடலின் எடை முதலானவையில் சரியாக வளர்ச்சி இடம்பெறவில்லை என மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் ஊட்டச் சத்து குறைபாடு பிரச்சினை நீடித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழில் துறையில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 29 வீதமானோர் குறைவான எடை கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஜூன்06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 06ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. …

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி Read More »

நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகாரங்களை பரவலாக்குவது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை மாளிக்க முடியும்

அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறனற்ற தன்மையை தவிர்ப்பது மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பது தொடர்பில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறனற்ற தன்மையை தவிர்ப்பது மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பது தொடர்பில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி …

நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகாரங்களை பரவலாக்குவது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை மாளிக்க முடியும் Read More »