ஐப்பசி 2023

நகர அபிவிருத்தி அதிகார சபை தொடர்பில் மக்கள் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர்

மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றத்தை மக்களுக்கு சேவை செய்வதன் மூலமே செய்ய முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  எனவே, அரச அதிகாரிகள் முதலில் மக்களுக்கு தங்களின் சேவைகளை சரியாக செய்ய அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.  நகர அபிவிருத்தி அதிகார சபையின் 55 புதிய உதவிப் பணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு கடிதம் வழங்கும் நிகழ்வில் (30) கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பத்தரமுல்லை செத்சிறிபாவில் அமைந்துள்ள நகர …

நகர அபிவிருத்தி அதிகார சபை தொடர்பில் மக்கள் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர் Read More »

பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

2023 நவம்பர் 01ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர்  31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா  மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் …

பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை Read More »

சுகாதார அமைச்சில் தகவல் முகாமைத்துவத்துக்கு பல கட்டமைப்புகள் இருப்பது பணத்தை வீணடிப்பதற்கா?

சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவக் கட்டமைப்புகள் பற்றிய முறையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) நியமிக்கப்பட்ட உப குழுவினால் மொறட்டுவை பல்கலைக்கழகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் இந்த உப குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவக் கட்டமைப்பு தொடர்பான கணக்காய்வு விடயங்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சிலர் உப …

சுகாதார அமைச்சில் தகவல் முகாமைத்துவத்துக்கு பல கட்டமைப்புகள் இருப்பது பணத்தை வீணடிப்பதற்கா? Read More »

தோட்டங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் மன உளைச்சல், புதிதாகப் பிறக்கும்  குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷ் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் …

தோட்டங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் மன உளைச்சல், புதிதாகப் பிறக்கும்  குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது Read More »

போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் ரூபா வங்கி கடன்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.10.19ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) அரச ஈட்டு முதலீட்டு வங்கி அழைக்கப்பட்டிருந்தது. இதில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் 2020, 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை என்பன ஆராயப்பட்டன. இதில் நிதி அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர், பொது முகாமையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் பின்வரும் …

போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் ரூபா வங்கி கடன் Read More »

கொழும்பு துறைமுக நகரப்பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு அரசாங்க நிதிபற்றியகுழுவில் அங்கீகாரம்

2021ம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2339/31ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் மட்டத்தில் காணப்படும் 10 வணிக நிறுவனங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்துக் காணப்படும் பிரச்சினை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது மூன்று முறைகளின் கீழ் ஒப்பந்தம் …

கொழும்பு துறைமுக நகரப்பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு அரசாங்க நிதிபற்றியகுழுவில் அங்கீகாரம் Read More »

இஸ்ரேலில் சட்ட விரோதமாக பணி புரியும் ஊழியர்களுக்கு தூதுவரின் தலையீட்டுடன் விசா?

யுத்த மோதல் காரணமாக இஸ்ரேலில் உயிரிழந்த பெண் பராமரிப்பு பணியாளர் திருமதி அனுலா ரத்நாயக்காவின் பூத உடலுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இன்று பிற்பகல் எரியவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்மறைக்த அனுலா வீரசிங்க தனது கடமைகளை உரிய முறையில் மேற்கொண்டவர். நான் இன்று அனுலாவின் உறவினர்களுக்கு சமகால அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பாக அனுதாபங்களை தெரிவித்துள்ளேன். அனுலாவுக்கு வழங்க …

இஸ்ரேலில் சட்ட விரோதமாக பணி புரியும் ஊழியர்களுக்கு தூதுவரின் தலையீட்டுடன் விசா? Read More »