ஆனி 2023

 சீனாவுக்கும் இலங்கைக்கிடையில் மீண்டும் எயார் சைனா விமான சேவை

சீனாவுக்கும் இலங்கைக்கிடையிலான சீனாவின் எயார் சைனா விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைவாக  சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையே விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. செங்டு தியான்ஃபு (Tianfu) சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் குறித்த தினங்களில் இரவு 8:55க்கு பண்டாரநாயக்க …

 சீனாவுக்கும் இலங்கைக்கிடையில் மீண்டும் எயார் சைனா விமான சேவை Read More »

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கடன் மறுசீரமைப்புத் திட்டம், பொது நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். பொது நிதிக் குழு இந்த விவகாரத்தை இன்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய , வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் றாளை சனிக்கிழமை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் …

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் Read More »

நாளை பாராளுமன்றத்தைக் கூட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு

எதிர்வரும் நாளை ஜுலை 01ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளைக்கு அமைய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பாணையை விடுத்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் சேமலாப நிதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதி

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சேமலாப நிதிக்கு குறைந்தபட்ச வட்டி  9 சத வீதமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும்,  பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உள்நாட்டு  கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம்  ஊழியர்களின் சேமலாப நிதியத்தியின் மீதான தாக்கம் எவ்வாறு அமையும் என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ,ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், …

ஊழியர்களின் சேமலாப நிதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதி Read More »

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர புதிய நியமனங்களுக்கு  உயர்நீதிமன்றம் தடை உத்தரவு

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான மனு சஞ்கைக்குரிய சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று முன்தினம் (28) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அஸ்வெசும – 5 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அஸ்வெசும திட்டத்திற்கான இறுதிப் பட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை. இந்த திட்டத்திற்காக 37 இலட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், இல்லங்கள் தோறும் சென்று ஆராய்ந்த போது அவற்றில் 5 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார் தற்போது 32 இலட்சம் விண்ணப்பங்கள் மாத்திரமே மீதமுள்ளதாகக் குறிப்பிட்ட நிதி இராஜாங்க அமைச்சர், திட்டத்திற்கான இறுதிப் பட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை  உண்மைப் பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று தெரிவித்தார்.

எவரையும் கைவிடாத வகையில் “அஸ்வெசும”திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுரை

“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பரீசீலனையின் பின்னர் அவற்றில் 3.3 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் “அஸ்வெசும” பலன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் என்ற வகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காக 02 மில்லியன் பேரின் பெயர் பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் மூவர் அடங்கிய தெரிவுக்குழுக்களின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட பின்பே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். “அஸ்வெசும” …

எவரையும் கைவிடாத வகையில் “அஸ்வெசும”திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுரை Read More »

தேர்தல்கள் ,மனித உரிமை ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர். துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இலங்னை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும், ஏனைய உறுப்பினர்களாக நிமலசேன கார்தியா புந்திஹேவா, தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்சானா பாத்திமா மற்றும் கலாநிதி தினுக் குணத்திலக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்கவும் ஏனைய உறுப்பினர்களாக …

தேர்தல்கள் ,மனித உரிமை ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் Read More »

ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப்போவதில்லை – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் வங்கித் துறையைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என்பதோடு, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை …

ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப்போவதில்லை – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க Read More »

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து விசேட அறிவிப்பு

2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரையிதலான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட தற்காலிக வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.