புரட்டாதி 2023

பணவீக்கம்: 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஓகத்தின் 4.0 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 1.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது, பெரும்பாலும் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூலையில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது. உணவு பணச்சுருக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 ஓகத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 5.2 சதவீதத்தைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்கும் தொடர்ந்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் …

பணவீக்கம்: 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி Read More »

இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளன

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். எவ்வாறாயினும் இலங்கை …

இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளன Read More »

சீரற்ற காலநிலை: 5051 பேர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1275 குடும்பங்களைச் சேர்ந்த 5051 பேர் இன்று மாலை (30) வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு 316 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மாகாணத்தில் 1275 குடும்பங்களைச் சேர்ந்த 5051 பேரும் ,மேல் மாகாணத்தில் 272 குடும்பங்களைச் சேர்ந்த 1034 பேரும் ,சப்ரகமுவ மாகாணத்தில் 199 குடும்பங்களைச் சேர்ந்த 770 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு – சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

தற்போது நிலவும் மழையுடன்கூடிய காலநிலையையடுத்து ஐந்து மாவட்டங்களில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் விடுக்கப்பட்ட 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.காலி, மாத்தறை, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் தேசிய கட்டிட ஆராய்வு அமைப்பினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நாளை காலை 10 மணி வரை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய பிரதேச செயலகப் பரிவு , காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலகப் பிரிவு, மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச …

5 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு – சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை Read More »

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய டி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பில் பிரஸ்தாபிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் …

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் Read More »

சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 30 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமைமேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை                                                                                                                                                                              மற்றும் …

சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழை Read More »

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலை இருக்கக் கூடாது என்ற நிலை ?

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்ட நீதவான்   ரி.சரவணராஜா   தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய கருத்துக்களை பார்க்கின்ற போது இதில் முக்கிய நபர்கள் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்ற செய்தியை அறியக்கூடியதாக உள்ளது.  நீதித்துறை எங்கே செல்கிறது? …

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலை இருக்கக் கூடாது என்ற நிலை ? Read More »

மன்னார் முத்தரிப்புத்துறை கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் ) பல நாட்கள் ஆகி சிதைவடைந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுமுத்தரிப்புத்துறை மீனவர்கள் வெள்ளிக்கிழமை (29) இதனை கண்டுள்ளனர்சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை

இலங்கையில் மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 8 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.வடமேல், தென், வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு, ஊவா மாகாணங்களில் இந்தப் பணி ஆரம்பிக்கப்படும்.மேல் மாகாணத்தில் தற்போது அமுலில் இருக்கும் முறை (eRL 1.0)  வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும்.இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளை அலுவலகங்கள் மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை …

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை Read More »