Foreign News

அந்தமான் கடல் பகுதிக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மோக்கா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மாநில அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு நிலையம்  நேற்று (11) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், …

அந்தமான் கடல் பகுதிக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம் Read More »

வங்கக்கடலில் புயல் உருவானதையடுத்து எச்சரிக்கை 

வங்கக்கடலில் புயல் உருவானதை அடுத்து தமிழகத்தில் ஒன்பது துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்துக்கு இதுதொடர்பில்  எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் இன்று இரவு தீவிர புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் …

வங்கக்கடலில் புயல் உருவானதையடுத்து எச்சரிக்கை  Read More »

புயலாக மேலும் வலுபெறக்கூடும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று (08.05.2023)  நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30 மணி அளவில் (09.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நாளை (10.05.2023) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை …

புயலாக மேலும் வலுபெறக்கூடும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை Read More »

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தடையை மீறி வீடியோ எடுத்தவர் மீது விசாரணை

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தடையை மீறி வீடியோ எடுத்தவர் மீது விசாரணை நடத்தப்பட்டுவருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்குள் பாதுகாப்புக் கருதி கையடக்க தொலைபேசி முதலான எந்த மின்னணு சாதனத்தையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய தொலைப்பேசியைக் கொண்டு சென்று ஆனந்த நிலையம் மற்றும் கருவறைக்குச் செல்லும் …

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தடையை மீறி வீடியோ எடுத்தவர் மீது விசாரணை Read More »

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -புயலாக வலுப்பெறக்கூடும்

தென்கிழக்கு வங்க்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (09) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன்பின்னர் புயலாக மாறி வங்கதேசம், மியன்மாரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு நிலையம் மதிப்பிட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மோகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை யெமன் நாடு வழங்கியுள்ளது. வங்க கடல் பகுதியில் புயல் உருவானாலும், இதனால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் …

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -புயலாக வலுப்பெறக்கூடும் Read More »