Lead Story

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 355 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தெரிவித்துள்ளனர். 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் இவ்வாறு இடைவிலகுவதாக தெரியவந்துள்ளது.  கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தீவக கல்வி …

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 355 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர் Read More »

யாழ்.விமான நிலைய ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியாவிடமிருந்து கடன் பெற எதிர்பார்ப்பு

இலங்கைக்கு அதிக நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால.த சில்வா தெரிவித்தார். அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால.த சில்வா தலைமையில் 24.05.2023ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கு ஏற்ற வகையில் …

யாழ்.விமான நிலைய ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியாவிடமிருந்து கடன் பெற எதிர்பார்ப்பு Read More »

யூரியாவின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்

யூரியாவின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைவாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 50 கிலோ எடை கொண்ட யூரியா உர மூட்டையை 9 ஆயிரம் ரூபாயவுக்கு விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

முச்சக்கர வாகன கட்டணம் குறைக்கப்பட மாட்டாது

பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வாகன கட்டணம் குறைக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நிலையான செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் அனைத்தும் தற்போது செலவுகளும் அதிகரித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். கட்டண மீளாய்வுக் குழுவின் ஊடாக முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தில் அரசாங்கம் குறிப்பாக தலையிட வேண்டும் எனவும், கட்டணத்தை குறைக்கக் கூடிய வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை எனவும் …

முச்சக்கர வாகன கட்டணம் குறைக்கப்பட மாட்டாது Read More »

புதிய கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் இன்று (யூன் முதலாம் திகதி) முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் யூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ …

புதிய கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் Read More »

இலகுரக ரயில் திட்டம்: மீள ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் ஜப்பானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக இந்த அனுமதி கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை …

இலகுரக ரயில் திட்டம்: மீள ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம் Read More »

பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவுறுத்தல்

எதிர்வரும்  29 ஆம் திகதி ஆரம்பமாவுள்ள 2022 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை  பரீட்சார்த்திகளுக்கு விரைவில் வழங்குமாறு பரீட்சை திணைக்களம் பாடசாலை அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சார்த்திகளுக்கு அவற்றை வழங்காமல் நிறுத்தி வைக்கக் கூடாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நுழைவுச் சீட்டுகள் இல்லாத காரணத்தினால் எந்தவொரு பரீட்சார்த்தியும் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் அதற்கான  முழுப்பொறுப்பையும் அதிபர்களே ஏற்க வேண்டும் எனவும் பரீட்சைகள் …

பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவுறுத்தல் Read More »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை  டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தல் 

புலம் பெயர் தொழிலாளர்களை அடிமைகளாக்காமல் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை  டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய அக்மீமன தயாராதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கள ராவய, இலங்கை மக்கள் கட்சி மற்றும் புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆகியன இணைந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு முன்பாக மௌனப் போராட்டத்தை நடாத்திய பின்னர் ஊடகங்களுக்கு …

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை  டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தல்  Read More »

UGC அனுமதி வழங்குவது, பட்டமளிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படல் வேண்டும்

இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் பாடநெறிகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்படும் போது அவை பல்வேறு சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் அதனை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் வழங்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (12) …

UGC அனுமதி வழங்குவது, பட்டமளிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் Read More »

தொழில் சட்டம்: உண்மைக்குப்  புறம்பான விடயங்களை தெரிவிப்பவர்களுக்கு  எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஒரு நூற்றாண்டு கால வரலாற்றுக்கு உரிமைகோரும்  இலங்கையின் தொழில் சட்டத்தை நவீன உலகத்திற்கு ஏற்றவகையில் மாற்றுவதற்காக ,பொது மக்களின்  கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும்  பணியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தற்போது ஆரம்பித்துள்ளது. அது தொடர்பான சட்ட மூலத்திற்கான பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை இருப்பினும்  பொது மக்களின் கருத்துக்களை பெறும் போது ,  மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான உண்மைக்குப்புறம்பான பிரசுரங்களினால் பொது மக்கள் மத்தியில் தொழில் சட்டம் குறித்து …

தொழில் சட்டம்: உண்மைக்குப்  புறம்பான விடயங்களை தெரிவிப்பவர்களுக்கு  எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு Read More »