Business

பணவீக்கம்: 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஓகத்தின் 4.0 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 1.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது, பெரும்பாலும் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூலையில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது. உணவு பணச்சுருக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 ஓகத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 5.2 சதவீதத்தைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்கும் தொடர்ந்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் …

பணவீக்கம்: 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி Read More »

இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் – ஓகத்து 2023

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 ஓகத்தில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றியது, இருந்தும் 47.0 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து நடுநிலையான அடிப்படை அளவுமட்டத்தை நோக்கிச் சென்றது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய, உயர்வான போட்டிமிக்க விலைக்கோரல் விலைக்குறிப்பீடு சமர்ப்பித்தல் செயன்முறையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் கிடைக்கப்பெறுகின்ற கருத்திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிறுவனங்கள் சந்தை விலையை விடவும் விலைக்குறைப்பதற்கு முனைந்தன. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான வீழ்ச்சியினால் பிரதிபலிக்கப்பட்டவாறு புதிய கருத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமை தொழிற்துறை மீது தொடர்ந்தும் கடுமையான பாதகமான தாக்கத்தினைக் கொண்டிருந்தது. உள்நாட்டு …

இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் – ஓகத்து 2023 Read More »

கொடுகடன்களை கைமாற்றத்தக்க படுகடன் சாதனங்களாக மாற்றுதல்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 129(2)ஆம் பிரிவின் பிரகாரம் நிலுவையாகவிருக்கின்ற இலங்கை மத்திய வங்கியிடமிருந்து கிடைத்த அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணங்கள் மற்றும் முதலாந்தரச் சந்தையில் இலங்கை மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட செலுத்தவேண்டிய திறைசேரி உண்டியல்கள் என்பவற்றை 2023 செத்தெம்பர் 21ஆம் திகதியன்று பின்வருமாறு பத்து (10) கிரமமாகக் குறைவடையும் நிலையான கூப்பன்* புதிய திறைசேரி முறிகளாகவும் பன்னிரண்டு (12) ஏற்கனவே காணப்படுகின்ற திறைசேரி உண்டியல்களாகவும் மாற்றம்செய்யப்பட்டுள்ளன: முழுவடிவம் : https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230921_conversion_of_outstanding_credits_of_cbsl_to_government_into_negotiable_debt_instruments_under_ddo_t.pdf

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்
2023 ஓகத்து

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 ஓகத்தில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளின் சுருக்கம் மெதுவடைதலையும் எடுத்துக்காட்டின.   தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 ஓகத்தில் 49.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, நடுநிலையான அடிப்படை அளவை அண்மித்துச் சென்று முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் தயாரித்தல் நடவடிக்கைகளில் மீட்சிக்கான சமிக்ஞைகளை எடுத்துக்காட்டியது. துணைச் சுட்டெண்களைக் கருத்திற்கொள்கையில், புதிய கட்டளைகள் மற்றும் நிரம்பலர் விநியோக நேரம் என்பன மாதகாலப்பகுதியில் அதிகரித்த அதேவேளை உற்பத்தி மற்றும் தொழில் நிலை ஆகியன சுருக்கமடைந்தே …

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்
2023 ஓகத்து
Read More »

பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமம் இலங்கைக்கு விஜயம்

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு பற்றிய எதிர்வருகின்ற பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் உள்நாட்டு அதிகாரிகளுடன் ஈடுபடுவதற்கும் முக்கிய உள்நோக்குகளை அவர்களுக்கு வழங்குவதற்கும், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தலிருந்து உயர்மட்ட பேராளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. பன்னாட்டு பேராளர் குழு பின்வருவோரை உள்ளடக்கியிருந்தது: முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230915_asia_pacific_group_on_money_laundering_visit_to_sri_lanka_mutual_evaluation_preparation_briefing_and_workshop_6th_to_8th_September_2023_t.pdf