சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தண்டனை முடிந்து குற்றவாளிகளை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும்…

கொழும்பில் ,”கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி,  முதலீட்டாளர்கள் மாநாடு” ஆரம்ப நிகழ்வு

கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு 7 ஜெட்வின்…

இன்றைய (05) வெளி நாட்டு நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (05.02.2024) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்கக் கூடிய எதிர்காலத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும்…

தற்போதைய ஜனாதிபதியை விட ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான ஒருவர் தமது கட்சியில் இருந்தால் அவருக்கு வழங்குவதே பொருத்தமானது எனவும் தகுதியானவர் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார். இத்தருணத்தில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்கக்கூடிய எதிர்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் கூறினார். அதற்கான அதிக தகுதிகள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கனேஹிமுல்ல பிரதேச சபைக் கூட்டத்தில் நேற்று (4) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றியோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் பற்றியோ அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் பேசமாட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இப்படிப்பட்ட தற்பெருமைக்காரர்களிடம் இருந்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். “ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டுக்கான அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி பேசினார். அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து நாட்டுக்காக உழைக்கச் சொல்லி அரசியலைத் தொடங்கினார். பொருளாதார சீர்திருத்தங்களில் நாட்டுக்கு நல்லது செய்வதே தவிர, மக்கள் கேட்பதை அல்ல என்றார். நாங்கள் எடுத்த முடிவுகள் மக்கள் முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செய்தது, நாட்டு மக்களுக்கு இந்த அமைப்பைப் பழக்கப்படுத்தியதுதான். விலை அதிகரிக்கும் போது அதிகரிக்கவும், குறையும் போது குறையவும் விலை சூத்திரம் வழங்கப்பட்டது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கங்களில் இல்லாதது போன்று இன்று பேசுகின்றார். திருமதி சந்திரிகா குமாரதுங்க வந்தபோது விகாரமஹாதேவி என்று கூறி அழைத்து வந்தவர். அவரை வெற்றியடைய வைத்து நான்கு அமைச்சர் பதவிகளையும் பெற்றார். அந்தத் தேர்தலில் ரெஜி அவர்கள் தோல்வியடைந்தார். அவர்கள் அரசாங்கத்தின் அங்கம் ஆனார்கள். மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்ட போது தெற்கிலிருந்து துட்டுகெமுனுவாகவே அழைத்து வரப்பட்டார். மஹிந்த சிந்தனையே நாட்டுக்கு சிறந்தது என தமது தலைவர்கள் கூறுவதை பார்க்கின்றனர். எம்முடன் இணைந்த பின்னர் சரத் பொன்சேகாவுடன் இணைந்தார். அங்கிருந்து ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு சென்றார். அதன் பின்னர் அனுரகுமாரவின் செயலாளர் ஊழல் குழுவின் தலைவராக செயற்பட்டார். அனுரகுமார அவரை இயக்கினார். அவரும் அந்த அரசாங்கத்தில் இருந்தார். நாங்கள் 225 பேரும் இருக்கவில்லை, ஆட்சி செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியாது. இன்று ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். 88/89 இல் என்ன நடந்தது என்று 2000க்குப் பின் வந்த தலைமுறைக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தத்தை மதிக்கவில்லை என்றால், அல்லது துண்டுப் பிரசுரம்…

சான்றிதழ் ,டிப்ளோமா தர கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான சான்றிதழ் மற்றும் டிப்ளோமா தர கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு…

தேசபிதாவுக்கு அமைச்சர் மரியாதை

அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவ சிலைக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்த அந்நாட்டு…

ஜனாதிபதி தலைமையில், 76 ஆவது தேசிய சுதந்திர தின விழா

76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று…

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 05 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை…

ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்

ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை…