பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக்கூடிய   நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொர்புகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் பதிவானதாக தெரிவித்த பரீட்சை ஆணையாளர் நாயகம்  ,அந்த சந்தர்ப்பத்தில்  பரீட்சைக்குத் தோற்றிய  மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை  செய்வதற்கு  அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள்   இலங்கை இராணுவம் மற்றும் தொடர்பான அனைத்து குழுவினரும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால்  அனைத்து மாணவர்களும் எந்தவித பிரச்சினையுமின்றி பரீட்சைக்கு தோற்றினார்கள் என்றார்.

எதிர்வரும் நாட்களில் காலநிலை தொடர்பில் அனைத்து பரீட்சார்த்திகளும் விசேட கவனம் செலுத்த வேண்டும். மழையுடன் கூடிய காலநிலை  காணப்படும் பிரதேசங்களிலுள்ள பரீட்சார்த்திகள் அதற்கு ஏற்றவகையில் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

‘2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பரீட்சை ஆரம்பமாகி   5 நாட்கள் நிறைவடைந்துள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை இன்னும் 4 நாட்களுக்கு நடைபெறும்.  பரீட்சை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் அனைவரும் கால நேரத்துடன் பரீட்சை மத்திய நிலையத்திற்கு  செல்லுமாறு கேட்டுக்கொள்வதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன