பொசன் நோன்மதி தினம்: அனுராதபுரம் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை புனித தலங்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஜனக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களையும்விட கூடுதலான பக்தர்கள் இம்முறை அனுராதபுரத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி நீர் நிலையங்களை அண்டியதாக பாதுகாப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனுராதரபும் நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்பொருள் பெறுமானம் மிக்க இடங்களுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் பக்தர்களைக் கேட்டுள்ளார்.

அனுராதபுரத்தை அண்டிய ரெயில் பாதையில் குறுகிய சில பாலங்கள் இருப்பதால் ரெயிலில் வருபவர்கள் மிதிபலகையில் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுள்ளார். பொசன் நோன்மதி தினத்தை ஒரு வினோத சுற்றுலாவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொசன் உற்சவத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிகிந்தலை, தந்திரிமலை புனித பூமிக்கு வருகைதரும் பக்தர்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அனுராதபுரத்திலிருந்து மாத்தறை –பெலியத்தே வரை பத்து விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று அனுராதபுரம் ரயில்வே நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சேவை இன்று முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை இடம்பெறும்.

விசேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்படி, 500ற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன