தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் நிலக்கடலை அறுவடை

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பாலம்போட்டாறு ‘சௌபாக்கியா ‘உற்பத்திக் கிராமத்தின் நிலக்கடலை அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது. நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீ பதி,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறு தோட்ட உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நிலக் கடலை அறுவடைக்கான உதவிகள் வழங்கப்படடன. தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இதன் மூலம் பாரிய விளைச்சலை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன