பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு விசேட குழு நியமனம்

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பான சட்ட மூலத்தின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரருடன் இணைந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் மீளாய்வு செய்யப்பட்டது. 

ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (01) கூடிய போது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) பிரதிநிதியால் சட்ட மூலம் தொடர்பில் முன்வைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சட்ட மூலங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்குமாறு ஒன்றியத்தின் தலைவர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, கலாநிதி றோஸ் விஜேசேகர, கலாநிதி ரமணி ஜயசுந்தர, கலாநிதி விஜய ஜயதிலக்க, விசேட வைத்திய நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்க மற்றும் உதேனி தெவரப்பெரும ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியதின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன