விலை மறுசீரமைப்பை கருத்திற் கொண்டு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளை விநியோகிக்காமையினால் சில பிரதேசங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் டு ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியவற்றிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலைப்பட வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளர்.
உரிய வகையில் வர்த்தக நடவடிக்கையை முன்னெடுக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றி பரிசீலனை செய்து அனுமதியை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதையும் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ளதையும் கருத்திற்கொண்டு இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இரண்டாவது கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 80 ரூபா வரை குறைக்கப்படும்.