வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -புயலாக வலுப்பெறக்கூடும்

தென்கிழக்கு வங்க்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (09) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன்பின்னர் புயலாக மாறி வங்கதேசம், மியன்மாரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு நிலையம் மதிப்பிட்டுள்ளது.

இந்த புயலுக்கு ‘மோகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை யெமன் நாடு வழங்கியுள்ளது. வங்க கடல் பகுதியில் புயல் உருவானாலும், இதனால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு நிலையம்  அறிவித்துள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன