மூளைக் காய்ச்சல் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மூளைக் காய்ச்சலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ( Meningitis) தடுப்பூசி தற்போது சுகாதார அமைச்சிடம் இல்லை என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விசேடமாக மூளைக் காய்ச்சல் பரவும் நாடுகளில் சுற்றுலா மற்றும்  கல்வி நடவடிக்கைகளுக்காக செல்லுவோருக்கு வைத்திய பரிசோதனை நிறுவக தடுப்பூசி மத்திய நிலையத்தினால் இந்த தடுப்பூசி வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் விசேட வைத்தியர் சமால் சஞ்சிவ தெரிவித்தார்.

இந்நோய் பரவியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்கு வந்தால் அது பெரும் பிரச்சினையை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் , இந்த தடுப்பூசியை தனியார் துறையிடம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த போதிலும் சில இடங்களில் இவை உரிய பாதுகாப்பான முறையில் வைக்கப்படாத நிலையில் அதனை பயன்படுத்தும் போது  பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன