மின்வெட்டு குறித்து மின்சக்தி அமைச்சர் பாராளுமன்றதில் விளக்கம்

சமனல நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கப்படுவதால் , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதியுடன் சமனல நீர்தேகத்தின் மூலமான மின்சார உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இருந்து விடுபட மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாது போனால் பல மாவட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16ஆம் திகதி சமனல நீர்த்தேக்கத்தின் மின்சார உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும். அது முற்றாக நிறுத்தப்பட்டால் மாத்தறை மாவட்டம், காலி, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் முழுமையாக அல்லது மூன்று மணிநேர மின்வெட்டை பகுதியளிவில் மேற்கொள்ள வேண்டி ஏற்படும். குறிப்பிட்டப்படி மின்சாரம் கொள்வனவு செய்யப்படாவிட்டால் . பகலில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இடம்பெற வாய்ப்பு உண்டு என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன