மக்களின் வங்கி வைப்புகளுக்கோ வட்டி வீதத்திற்கோ பாதிப்பில்லை என்கிறார் நிதி இராஜாங்க அமைச்சர்

உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்த அவர் கடன் மீள்கட்டமைப்பு என்பது குறைப்பு செய்யும் நடவடிக்கை அல்ல. இதன்மூலம் கடனை பிற்போடுவது கடனை குறைப்பது, கடன் செலுத்தும் கால எல்லையை நீடிப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன