பொருட்களின் விலை அடுத்த வாரத்தில் கட்டுப்படுத்தப்படும் – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் அத்தியாவசி பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு   , எதிர்வரும் வாரங்களில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில  விலைக் கட்டுப்பாடுகள் அடங்கிய பல வர்த்தமானி அறிவிப்புகள்; வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக இதுவரை வழங்கப்பட்ட சலுகைகளுக்கு ஏற்ப பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார். கணிசமான லாபம் சம்பாதிப்பவர்கள் வேண்டுமென்றே விலையை அதிகரிப்பது நியாயமற்றதாகும் என்றும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன