பாடசாலை மாணவர்களின் பேக், காலணிகளின் விலைகள் குறைவடையும்

எதிர்வரும் ஜூலை மாதம்  15 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களின் புத்தக பேக்  மற்றும் காலணிகளின் விலைகளை 10 வீதத்தால் குறைக்க தயாரிப்பாளர்கள்  இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைலாக மாணவர்களின் பேக் (பைகள்) மற்றும் காலணிகளின் விலை ரூ.350 முதல் 450 வரை குறைவடையும் . கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தயாரிப்பாளர்கள் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சருக்கு இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் மூலப்பொருட்களின் விலை குறைந்தால் அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது தயாரிப்பளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக பாடசாலை பேக் மற்றும் பாதணிகள் தயாரிப்பாளர்கள் நேற்று முன்தினம்  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை நிதியமைச்சில் சந்தித்து விலை குறைப்பு தொடர்பில் தெரிவித்துள்ளனர். ஜூலை 15 முதல் விலைகளை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன