பன்றி நெல் தாக்கத்தை கட்டுப்படுத்த நடமாடும் விழிப்புணர்வு கருத்தரங்கு

பன்றி நெல் தாக்கத்தை கட்டுப்படுத்த நடமாடும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுகிறது

இந்த விழிப்புணர்வு செயல் அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அஞ்ஞனாதேவி ஸ்ரீரங்கன் இதுதொடர்பாக தெரிவிக்கையில்  ,விழிப்புணர்வுக் கருத்தரங்கு விவசாயிகள் ஒன்றுகூடும் பகுதிகளில், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒருங்கிணைவுடன் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலபோகங்களில் பன்றி நெல்லின் தாக்கம்  மறவன்புலவு, சாவகச்சேரி, மாசியப்பிட்டி, கந்தரோடை, அளவெட்டி, கரவெட்டி பல பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெல் விளைச்சல் மற்றும் தரம் குறைவடைந்திருந்தது.

உறங்கு நிலையில் 05 வருடங்கள் வரை இதன் தாக்கம் மண்ணில் காணப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இதனால் பன்றி நெல்லின் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, யாழ்.மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன