திருகோணமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த விசேட திட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இதுதொடர்பான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில நேற்று (15) இடம் பெற்றது.. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலத்திலும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திட்ட அறிக்கையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


சமூக சேவை உத்தியோகத்தர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன