‘தன்னோ புதுன்கே ஸ்ரீ தர்மஸ்கந்தா’ பாடல் தேசிய மரபுரிமையாக பிரகடனம்…

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் பேரில்இ ‘ தன்னோ புதுன்கே ஸ்ரீ தர்மஸ்கந்தா ‘ பாடலை அதன் தனித்துவமான மற்றும் அரிய பண்புகளின் அடிப்படையில் தேசிய மரபுரிமை பாடலாக பிரகடன்படுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டது. குழுவின் தீர்மானங்களின்படி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு 2023.05.15  அன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தேசத்தின் இரசனையிலும் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பாடலானஇ ‘ தன்னோ புதுன்கே ஸ்ரீ தர்மஸ்கந்தா ‘ பாடல் மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஜனரஞ்சகப் பாடலாக பிரபலமாக உள்ளது. தேசப் பற்றையும் வரலாற்று உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தப் பாடல்இ இதுகால வரையிலான  சுதேச இசைப் பண்பாடு பற்றிய ஆய்வில் முக்கியக் காரணியாகக் கருதப்படுவதுடன்இ இந்நாட்டு இசைக் கலைஞர்களுக்கு உத்வேகமாகவும் அமையும்.

தேசிய அங்கீகாரத்தைப்பெற்ற தேசிய கீதமாக கட்டியெழுப்புவதில் இது ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டில் தேசிய கீதம் பயன்படுத்தப்படும் வரை இந்த பாடல் விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் தேசிய பாடலாக பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

சமகால அனுராதபுர யுகத்தின் வரலாறு மற்றும் சூழலால் வளம்பெற்ற வரலாற்று உணர்வை வெளிப்படுத்தும் இப்பாடல் ஜோன் டி சில்வாவின் சிரிசங்கபோ நாடகத்தில் வரும் (1903) பாடலாகும். இதற்கு விஸ்வநாத் லௌஜி இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலை தேசிய மரபுரிமையாக ஆக்குவதற்கு சட்ட அல்லது வேறு அழுத்தங்கள் இல்லை என தீர்மானித்த குழுஇ இதற்கு நாட்டின் புலமைச் சொத்து சிக்கல்களுகம் இல்லை என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

பொது  நிர்வாக உள்நாட்டலுவல்கள்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக குழுவின் தலைவராகவும்இ குழு உறுப்பினர்களாக பௌத்த சாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரனஇ தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கஇ கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பாக்யா கட்டுதெனியஇ ஹெல ஹவுலேயின் தலைவர் ஸ்ரீநாத் கனேவத்தஇ அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைவர் சந்திர நிமல் வாகிஸ்தஇ இலக்கியவாதி சுனில் சரத் பெரேராஇ இசைக்கலைஞர் லயனல் குணதிலக்கஇ ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் காந்தி விஜேதுங்க ஆகியோர் அங்கம் வகித்தனர்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன