சீனாவின் டியன்ஜின் நகரில் உலக பொருளாதார மாநாடு

உலக பொருளாதார மாநாடு சீனாவின் டியன்ஜின் நகரில் இன்று ஆரம்பமாகிறது. மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்n;பறும் இந்த மாநாட்டில் அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கை சார்பில் கலந்துகொள்கிறார்.

தொழில் முயற்சி – உலகப் பொருளாதாரத்தின் கிராமிய சக்தி என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த மாநாடு பொருளாதார சவால்கள் தொடர்பில் அரசியல் மற்றும் வர்த்தக தலைமைகளுக்கு இடையில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புக்கு வசதி செய்யும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிராந்திய மற்றும் உலக கூட்டு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்க்கும் 90இற்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் மற்றும் வர்த்தக தலைமைகள் இதில் பங்கேற்கின்றன.

இழந்த பத்தாண்டுகளை தவிர்த்தல் என்ற தலைப்பில் இடம்பெறும் வட்டமேசை சந்திப்பிலும், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுவூட்டுவது எப்படியென்ற கலந்துரையாடலிலும் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பார். இதன்போது அவர் சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். பெய்ஜிங் நகரிலுள்ள இலங்கையர்களை சந்திப்பதற்கும் டியன்ஜின் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுடன் கருத்துக் பரிமாறிக் கொள்வதற்கும் அமைச்சர் எதிர்பார்த்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன