கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்கு அம்மை நோய்

கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் இறைச்சிக்காக மாடுகளை பயன்படுத்துவோர்   மிக அவதானத்துடன் செயற்படுமாறு, கால் நடை சுகாதாரத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண மேலதிக பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ. நதீர் தெரிவித்துள்ளார்.

மாடுகளுக்கு ஒரு வித வைரஸ் தொற்று நோய் பரவி வருபதனால் சில பிரதேசங்களில் இந் நோயின் தாக்கத்தின் காரணமாக மாடுகள் இறக்கக் கூடிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

மாடுகளின் உடம்பில்  கட்டி பாதத்தில் புண் ,கழுத்து பகுதியில் புண் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகில் உள்ள கால்நடை சுகாதார வைத்தியதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவுக்காக மாட்டிறைச்சி, பால் போன்றவற்றை பயன்படுத்துவதை தற்காலிகமாக  நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுளளது.

பண்ணையாளர்கள் மாடுகளை ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னுமோர் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன