கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) வெளியிட்டுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கானநாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2023 மே 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட  கடற்பரப்புகளில் பலஇடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது தென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள்ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும். அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன