உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கடன் மறுசீரமைப்புத் திட்டம், பொது நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். பொது நிதிக் குழு இந்த விவகாரத்தை இன்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய , வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் றாளை சனிக்கிழமை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார். இது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.