2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகாலத்தில் உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது
இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக புவி வெப்பம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் 5 ஆண்டுகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
இது மனிதர்களால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்கள் மட்டுமின்றி எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றமும் முக்கிய காரணி என்று ஐ.நா.எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு 1.1 டிகிரி செல்ஷியஸ் முதல் 1.8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கலாம் அல்லது 5 ஆண்டுகளில் குறைந்தது ஒரு வருடம் அதிகபட்சம் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பருவநிலை மாற்றும் பற்றி பேசிய உலக வானிலை மையத்தின் தலைவர் Petteri Taalas, வரும் நாட்களில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். சுகாதாரம், உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.