உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுவரை அறுபத்து மூன்று பாடங்களுக்கான  மதிப்பெண் விடயங்கள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர்  குறிப்பிட்டார்.

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பல்கலைக்கழக விரிவுரையாளர்  சங்கம், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடசாலை விடுமுறை காலமும் குறித்த செயற்பாடுகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும். பரீட்சை முடிந்ததும் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த்  மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன