இலகு ரயில் திட்டம் குறித்து…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரச திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குணருவன் குழுவிடம் கோட்டை மாலம்பே இலகு ரயில் திட்டம் கையளிக்கப்படாமை தொடர்பில் அரச கணக்காய்வு குழு கவனத்தில்கொண்டுள்ளது.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சம்பத் மந்திரிநாயக்க சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதம் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மா நகர போக்குவரத்து தொடர்பான திட்டங்கள் இந்த குழுவிற்கு சமர்ப்பிற்கப்பட்ட சந்தர்ப்பதிலும் முன்னாள் ஜனாதிபதி இலகு புகையிரத திட்டத்தை இரத்து செய்ய முயற்சித்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலகு ரயில் திட்டத்தை ரத்து செய்ய முனைந்ததாக பேராசிரியர் லலித சிறி குணருவன் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும் ,இந்தத் திட்டத்துக்கும் த மக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்து அவர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மார்க் சில்வா

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன