அஸ்வெசும – 5 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அஸ்வெசும திட்டத்திற்கான இறுதிப் பட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை. இந்த திட்டத்திற்காக 37 இலட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், இல்லங்கள் தோறும் சென்று ஆராய்ந்த போது அவற்றில் 5 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்

தற்போது 32 இலட்சம் விண்ணப்பங்கள் மாத்திரமே மீதமுள்ளதாகக் குறிப்பிட்ட நிதி இராஜாங்க அமைச்சர், திட்டத்திற்கான இறுதிப் பட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை  உண்மைப் பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன