அமைதியான மக்களின் நல்வாழ்வை சீர்குழைக்க எவருக்கும் சமகால அரசாங்கம் இடமளிக்காது

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி மதங்களுக்கு இடையிலான நல்லுறவை  சீர்குழைக்கு இரகசிய வேலைத்திட்டம் இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர்  பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் இதற்கு இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் தியைக்களத்தில் நேற்று (31)  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ,அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் , புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தியுள்ள தாகவும்  குறிப்பிட்டார்.

இதுபோன்ற மோதல்களை ,நாம் எதிர்கொண்டுள்ளோம். நிராயுதபாணி, அப்பாவி மற்றும் அமைதியான மக்களின் நல்வாழ்வை சீர் குழைக்க எவருக்கும் சமகால அரசாங்கம் இடமளிக்காது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன