வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்கக் கோரி அமைச்சுக்குள் பிரவேசித்த சிங்கள ராவய

வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்கக் கோரி சிங்கள ராவய அமைப்பின் சங்கைக்குரிய அக்மீமன தயாரதன தேரர் உள்ளிட்ட சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார நம்பிக்கையான பதிலை வழங்கினார்.

சிங்கள ராவய தேசிய அமைப்பின் தூதுக்குழுவினர் முன்னறிவிப்பு இன்றி அமைச்சுக்கு வந்திருந்த நிலையில், அப்போது இடம்பெற்றுக்கொண்டிருந்த கலந்துரையாடலையும்  அமைச்சர் நிறுத்திவிட்டு, தூதுக்குழுவைச் சந்தித்தார்.

ஆகக் கூடுதலான அந்நியச் செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவோர் புலம்பெயர் தொழிலாளர்கள்.   புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு சந்சர்ப்பங்களில்  பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, அவற்றை நிர்வகிப்பதற்கான முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர். இதற்காக உள்ள தீர்வுதான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயப்படுத்தலுக்கு  உட்படுத்தினால் எந்த நாடுகளில் இருக்கும் ஊழியர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அவற்றைக் கவனித்துக் கொள்ள முடியும். இவ்வாறான தீர்வை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் என்று சிங்கள ராவய அமைப்பின் சங்கைக்குரிய அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்தார். 

இதற்கு சாதகமான பதிலை வழங்கிய அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் திரு .ஆர்.பி.ஏ.விமலவீரவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இதற்கு பதிலளிக்கையில் ‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் இருக்கும் பிரச்சினைகளில் 99 வீதமான பிரச்சினைகளை தீர்க்க முடியும். வெளிநாட்டு வேலைவாப்புத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர், இரண்டு மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும். அடுத்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.’ என்றார்.

இது சிறியளவிலான டிஜிட்டல் மயமல்ல ஏதேனும் வேலைவாய்ப்பு Order கிடைத்த நாள் முதல் ஊழியர்கள் தொழிலுக்காக வெளிநாடு சென்று திருப்பும் வரை அதுதொடர்பான அனைத்து விடயங்களும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். இவற்றை டிஜிட்டல் மயமாக்குவதற்கு பல பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

 ‘சில நாடுகளில் பெண்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போது   கைடக்கதொலை பேசியை பயன்படுத்தும் போது அவர்  சோகமாக காட்சியளிக்கும் போது அந்நாட்டு தூதரகத்தில் இருந்து அனைத்து இடங்களுக்கும் அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும். தூதரகம் இதில் தலையிடாதபோது, அவர்களைப் பற்றி அமைச்சு இந்த குறைபாட்டை அறிந்துகொள்வதற்கான முறையொன்றுக்கும் வழிவகை செய்யப்படும். தற்போது வெளிநாட்டு வேலைக்குச் சென்று பல பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள் திருடர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஏமாற்றி அழைத்துச் செல்லவும் வாய்ப்பு உண்டு. தவறான குடும்பப் பின்னணி அறிக்கைகள், மருத்துவப் பதிவுகள் இவற்றை  டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நாம் தடுக்க முயற்சிக்கிறோம். இவ்வாறான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கம் போது சில அமைச்சுக்களின் அனுமதியை பெறுவதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன. சங்கைக்குரிய தேரர் அடிக்கடி இவற்றை சுட்டிக்காட்டுவதை வரவேற்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை சிங்கள ராவய தேசிய அமைப்பின் செயலாளர் திரு. பிரபாத் ரணதுங்க, ‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை தரமதிப்பீடு செய்வதற்கான முறைமையொன்றை தயாரிக்குமாறு’ கோரிக்கை விடுத்தார். இதன்போது அதற்கான அமைப்பை தயார் செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில்  இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு  செல்லும்போது கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் சிங்கள மற்றும் தமிழ் பிரதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலா வீசா ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்காக பணியாளர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன