இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 பெப்ரவரி06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2024 பெப்ரவரி 06ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.