வடமாகாண ஆயுள்வேத வைத்திய சபையால் வட மாகாணத்தில் நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
இந்த சேவை நாளை (19) காலை 08.00 மணி முதல் 12.30 வரை, கிளிநொச்சி மாவட்ட சித்த மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை மன்னார் மாவட்ட சித்த மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை யாழ்ப்பாணம் சித்த மருத்துவமனையிலும் நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆயுள்வேத வைத்தியர்களின் பதிவுகளை புதுப்பித்தல், புதிய பதிவுகளுக்கான விண்ணப்பங்களை வழங்குதல், ஆயுள்வேத வைத்திய சபையின் இலச்சினையுடன் அச்சிடப்பட்ட சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இந்த நடமாடும் சேவையின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளன