எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்படக்கூடும் என அரசியல் வட்டார தவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமரை அப்பதவியில் இருந்து நீக்கிய முன்னாள் ஜனாதிபதி மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அமைவாக, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அவரது பதவியை இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் , அவருக்கு பல பொருறுப்புக்கள் வாய்த அமைச்சுப் பதவியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டிற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் மேற்கத்திய நாட்டின் தூதரகத்தின் தலையீடு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கும் குறிப்பிட்ட தூதரகம் செயல்பட்டதாவும் கூறப்படுகிறது. வியன்னா உடன்படிக்கையை மீறியவகையில் தூதரகம் நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்றவகையில் ஈடுபடுவதாக இலங்கையின் சிவில் அமைப்புக்கள் வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளன.
.