சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் வசதியினைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக பதில் நிதியமைச்சர் செஹான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதுவரை மேற்கொண்டிருக்கும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டாவது கடன் வசதியினைப் பெறுவதற்கான முழுமைப்படுத்தப்பட்ட பணிக்குழாத்தின் உடன்பாட்டினைப் பெறும் பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தின் பின்னர் முன்னெடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் ஊழல் மிகுந்த கொள்கைகளால் சர்வதேச நாணய நிதியம் கவலையடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று ஸ்ரீ ராம கிருஷ்ணன் வித்தியாலயத்திற்கு சக்வல வேலைத்திட்டத்தின் கீழ் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பேரூந்து வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர்
வருமான இலக்குகளை எட்டுவது உள்ளிட்ட இலக்குகளை அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியதால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.