பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளர்.
பிரதமர் இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளார். பிரதமருடன் 11 பேரைக்கொண்ட குழுவும் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான WL-402 இல் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு பயணமாகியுள்ளனர்