பாலின உணர்திறனைப் பாதுகாக்க பாராளுமன்றம் பல நடவடிக்கைகள்

பாலின  உணர்திறனைப் பாதுகாப்பதற்கு வரையறைகளுக்கு மத்தியில் கடந்த காலத்தில் பாராளுமன்றத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இவற்றில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளில் பாலின உணர்திறனை விபரிக்க பாலின ரீதியான பக்கச்சார்பு இன்றி நடுநிலையான அர்த்தங்களைக் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு தனித்துவமான செயல் என்று அவர் சுட்டிக்காட்டினார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஊடாக பெண்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக குரல் எழுப்பி இவை தொடர்பில் உரிய தலையீடுகளை மேற்கொள்ள முடிந்திருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாலின உணர்திறன் சமூக உள்ளடக்கம் மற்றும் அறிக்கையிடல் தொடர்பில் அண்மையில் (27) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிடுகையில், “மனிதர்களுக்கிடையில் சிறந்த தொடர்பைக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நாம் இந்த அனைத்து விடயங்களையும் முன்னெடுக்கின்றோம். பன்முகத் தன்மை மிகவும் அழகான விடயம். மனித உலகில் முதலில் ஏற்படும் வேறுபாடு ஆண், பெண் என்பதாகும். ஆனால் இந்த வேறுபாடு சமூக-கலாச்சார ரீதியாக அரசியல் ரீதியாக விளக்கப்படும்போது,  ​​சில கட்டமைப்புகளில் இது ஆண்களை மையமாகக் கொண்டதாகவும்,  ஓரங்கட்டப்பட்டதாகவும் இருப்பதைக் காணலாம். இவ்வாறான பின்னணியில் பொதுவான நிலைப்பாட்டுக்குப் பதிலாக வேறொருவராக மாறுவதற்கான போக்கை நீங்கள் காணலாம். மற்றொன்றிற்குப் பதிலாக அகநிலை ரீதியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பொதுவான மனிதநேயத்தை உருவாக்குவதற்கே நாம் இவை அனைத்தையும் செய்கின்றோம். இதனாலேயே பாலின பன்முகத்தன்மையின் விரிவாக்கம் இந்த நேரத்தில் விவாதிக்கப்படுகிறது” என்றார்.

ஜனநாயகத்தில் பாலினம் மற்றும் சமூக ஈடுபாடு பற்றிய உணர்வுப்பூர்வமான ஊடக அறிக்கையிடலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாலின உணர்திறன் மற்றும் ஊடக அறிக்கையிடலின் முக்கியத்துவம் தொடர்பில் பாலின உணர்திறன் தொடர்பான ஆலோசகர் இந்திக தயாரத்ன  கருத்துரை வழங்கினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் புகாரளிப்பதில் நிலவ வேண்டிய நெறிமுறைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி கௌரவ டாக்டர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே உரையாற்றினார். பாலின உணர்திறன் தொடர்பில் அறிக்கையிடுவதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சிலோன் டுடே பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மெத்மலி திசாநாயக்க பகிர்ந்துகொண்டார்.

பாலின உணர்திறன் தொடர்பான மொழிப் பிரயோகம் தொடர்பில்  மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லிஹினி பெர்னாந்துவும் பாலின பிரச்சினைகள் தலைப்புகள் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன அவர்களும் விளக்கம் அளித்தனர். சிரேஷ்ட ஊடகவியலாளர் நாரத பக்மீவேவா நடைமுறை ரீதியில் அறிக்கையிடல் பற்றி விளக்கமளித்தார்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன