பணம் தூயதாக்கலுக்கெதிரான வழிமுறைகளை துரிதமாக அதிகரிக்குமாறு உண்மைச் சொத்து முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவானது “பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு கடப்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்திகள்” பற்றி 2023 யூன் 26 அன்று உண்மைச் சொத்துத் துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுசெய்தது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநரும்ஃபணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமை உரையினை நிகழ்த்தியதுடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு. டபிள்யு. எஸ். சத்யானந்த, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எந்திரி. ஆர். எச். ருவினிஸ் மற்றும் உண்மைச் சொத்துத் துறையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. ஹார்டி ஜமால்தீன் ஆகியோரும் கூடியிருந்தவர்களுக்கு உரை நிகழ்த்திய அதேவேளை கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் திரு. சரண கருணாரத்னவும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
தொழிற்துறையிலிருந்தும் அதேபோன்று பதிவாளர் நாயகம் திணைக்களம், கொழும்பு காணிப் பதிவகம், இலங்கை கூட்டு ஆதன அபிவிருத்தியாளர்களின் அமைப்பு, கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை, இலங்கை வர்த்தக சம்மேளம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றிலிருந்தும் 120 இற்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கலந்துகொண்டோருக்கு உரை நிகழ்த்துகையில் முனைவர் வீரசிங்க, உண்மைச் சொத்துத் துறையின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி, துறையினுள் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலானது துறையில் காணப்படும் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியளித்தல் இடர்நேர்வுகள் தணிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்கின்ற அதேவேளை பன்னாட்டு பரிந்துரைகள், ஆளுகை மற்றும் ஊழலுக்கெதிரான கட்டமைப்பு என்பவற்றின் கீழ் கடப்பாடுகளை நிறைவுசெய்யும் என்பதை எடுத்துக்காட்டினார்.
அத்தகைய முயற்சிகள், நாட்டின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பினை மேலும் வலுப்படுத்துமென்று அவர் குறிப்பிட்டதுடன் இத்தேசிய முயற்சியை நோக்கி நிதியியல் உளவறிதல் பிரிவுடனும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுடனும் நெருங்கிப் பணியாற்றுமாறு துறையின் ஆர்வலர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230707_real_estate_agents_are_adviced_to_ramp_up_aml_measures_t.pdf