இளம் வயதிற்கு உட்பட்ட 06 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் நேற்று முன்தினம் (10) மாத்திரம் 08 பொலிஸ் பிரிவுகளில் காணாமல் போயிருப்பதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன இளம்வயதிற்கு உட்பட்ட 06 பேரில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஜவர் இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
இவர்களுள் மடாடுகம பொலிஸ் பிரிவில் மாத்திரம் 03 இளம் வயதினரைக்க காணவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதைக்கொண்ட ஒருவரும் , தலாவைச் சேர்ந்த 16 வயதைக்கொண்டவரும் , பொலன்னறுவையைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
காஹதுடுவ மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவுகளுக்கு காணாமல் போண முறைப்பாடுகள் தலா இரண்டு வீதம் 4 முறைக்பாடுகள் கிடைத்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஏனைய முறைப்பாடுகள் கொஸ்லந்த, வெள்ளவத்தை, தொம்பே, இப்பலோகம மற்றும் கலவான பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன.