நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று (12) பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது..
வறட்சியினால் நாட்டில் 11 மாவட்டங்களில் 49,867 குடும்பங்களை சேர்ந்த 163,111 பேர் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 மஹாவலி திட்டத்தின் 42 இன் நீர் கொள்ளளவு 30 வீதமாக குறைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
344 நீர் விநியோக அமைப்புக்களில் 20ல் முழு நேர நீர் விநியோகம் நிறுத்தப்பட்டு பகுதி நேர அடிப்படையில் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை இன்று (12) அறிவித்துள்ளது.
குருணாகல், ஹெட்டிபோல, நிகவரெட்டிய வாரியபொல, மாத்தறை -ஊருபொக்க, ஹம்பந்தோட்டை – பெலியத்த முருதவெல, தங்காலை, வலஸ்முல்ல, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில், மொனராகலை – பிபிலை, அம்பகஸ்துவ, பண்டாரவளை, போகஹகும்புர, ஹல்தமுல்லை, கந்தகெட்டிய,சீலதெட்டிய, அமுனுகெலே, கெப்பட்டிபோல ஆகிய நீர் வழங்கல் அமைப்புகள் இவ்வாறு பகுதி நேர அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் நீர் விநியோகம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன