நகர அபிவிருத்தி அதிகார சபை தொடர்பில் மக்கள் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர்

மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றத்தை மக்களுக்கு சேவை செய்வதன் மூலமே செய்ய முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 எனவே, அரச அதிகாரிகள் முதலில் மக்களுக்கு தங்களின் சேவைகளை சரியாக செய்ய அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார். 

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 55 புதிய உதவிப் பணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு கடிதம் வழங்கும் நிகழ்வில் (30) கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பத்தரமுல்லை செத்சிறிபாவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பின்வருமாறு தெரிவித்தார். 

நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பது நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாகப் பொறுப்பான, மக்களுடன் நேரடியாகக் கையாளும் ஒரு நிறுவனமாகும். அதனால், பதவி உயர்வு பெறும் இந்த அதிகாரிகள் அனைவரும், தங்கள் தேவைகளை நிறைவேற்ற, மக்களை கஷ்டப்படுத்தாமல் தீவிரமாக  செயல்பட வேண்டும். ஏனென்றால், அதிகாரிகள் வேலை செய்யாதபோது, ​​அரசியல்வாதிகளைத்தான் அவர்கள் ஏசுகிறார்கள். மக்கள் அதிகாரிகளை குறை கூறுவதில்லை. அந்த நிலைக்கு நான் விழத் தயாரில்லை. இந்த நிறுவனத்தில் நடக்கும் அனைத்தும் எனக்கு தெரியும். எனவே யார் வேலை செய்கிறார்கள்? யார் வேலை செய்யவில்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்கும்.

அண்மைக்காலமாக இந்நிறுவனத்தில் இடம்பெற்ற சில சில விடயங்கள் காரணமாக நகர அபிவிருத்தி அதிகார சபை தொடர்பில் மக்கள் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அந்த தவறான படத்தை நாம் அழிக்க வேண்டும். அதைச் செய்வதற்கான எளிதான வழி வேலை செய்வதுதான். பதவி உயர்வு பெற்ற இந்த அதிகாரிகளிடம் நேர்மையான சேவையை எதிர்பார்க்கிறேன். அதனை 8 மணித்தியாலத்துக்கு மட்டுப்படுத்த  வேண்டாம். மக்களை திருப்திப்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பதை நாம் குழுவாகக் கூடி கலந்துரையாட வேண்டும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர்களாக அதிகாரிகளை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வில் நான் செல்வாக்கு செலுத்தவில்லை. மேலும், நான் எந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் அப்படியான செல்வாக்கொன்றை செலுத்துவதற்கு  இடமளிக்கவில்லை. இது மிகவும் சுயாதீனமான நேர்முகத் தேர்வாகும். நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்படிப்பட்ட நேரத்தில் அரச நிறுவனத்திற்கு புதிய பதவி உயர்வு வழங்குவது பெரிய ஆபத்து. ஆனால் நான் அமைச்சர் என்ற வகையில் அதனைத் துணிந்து செய்தேன். மக்கள்,  அமைப்பு மாற்றத்தை கேட்கின்றனர். மக்களுக்காக உழைத்தால் மட்டுமே அந்த அமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். உங்களிடமிருந்து வேலையை மட்டுமே எதிர்பார்க்கிறேன். நீங்கள் சரியானதைச் செய்தால், நான் உங்களைப் பாதுகாக்க முன்வருவேன். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டு என் பின்னால் வராதீர்கள். அதனால்தான் “மக்களை முதன்மைப்படுத்தி” வேலை செய்ய பழகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் அங்கு பேசுகையில்,

 இந்த பதவி உயர்வுகளுக்கான நேர்முகப் பரீட்சை  நடந்தபோது, ​​எங்களுக்கு ஓரளவு  செல்வாக்கு வந்தது. ஆனால் அமைச்சரின் தலையீட்டால் அந்த செல்வாக்கை எங்களால் தடுத்து நிறுத்த முடிந்தது. இன்னொரு அனுபவம் வித்தியாசமானது. மற்றொரு வாய்ப்பு  இப்படியானது. அனுபவத்தில் மட்டும் நிறுவனங்களை நடத்த முடியாது. முதிர்ந்த மக்கள் மத்தியில் இளைய தலைமுறையினரின் கருத்துக்கள் தேவை. அந்த கலப்பின் மூலம் ஒரு நிறுவனத்தை திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இந்த நேரத்தில், அரச சேவை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தத்தமது வேலையை எவ்வாறு சரியாகச் செய்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்கள் இடத்திற்கு வருவதற்கு நிறைய பேர் வெளியில் காத்திருக்கிறார்கள். எனவே கடினமாக உழைத்து அடுத்த பதவிகளுக்கு வர முயற்சி செய்யுங்கள். நகர அபிவிருத்தி அதிகார சபையில் உழைக்கும் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

 இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி, பிரதி பணிப்பாளர் நாயகம் (மனித வளங்கள் மற்றும் நிர்வாகம்) சொலமன் சுமனசூரிய ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன