அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவ சிலைக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (04) மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் முதலாவது பிரதமர் என்ற ரீதியில் செயல்பட்டு,சுதந்திர இலங்கையை உருவாக்கி இலங்கை மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த தேசப்பிதா டி.எஸ்.சேனநாயக்க மேற்கொண்ட அரும்பெரும் பணியை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வையடுத்து இவர்கள் அநுராதபுரம் ஐ.தே.க இளைஞர் மாநாட்டிற்கு அமைச்சர் தலைமையில் சிலைக்கு அருகிலிருந்து பாதயாத்திரையாகச் சென்றனர்.