தென் மாகாணத்தில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தில் நேற்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

காலநிலை சீரடைந்ததையடுத்து பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தின் காரணமாக தென் மாகாணத்தின் பல கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன.

தென் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ,  பெய்த கன மழை காரணமாக சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலையிhனல் பாடசாலைகளுக்கு விடுமறை வழங்குவதை குறித்து முடிவெடுக்க அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இதன்படி, மொரவக கல்வி வலயத்தின் மொரவக, பஸ்கொட மற்றும் கொட்டபொல பிரிவுகளிலும், முலட்டியன கல்வி வலயத்தின் திஹகொட பிரிவு மற்றும் மாலிம்படை மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குரஸ்ஸ பிரிவுகளிலும் உள்ள பல பாடசாலைகள் நேற்றைய தினம் மூடப்பட்டதாக  தென் மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன