சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அதன் இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க மற்றும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்க அகியோர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (30) கேகாலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இதன்போது உரையாற்றிய மாகாண ஆளுநர்,
சப்ரகமுவ மாகாண ஆசிரியர் பற்றாக்குறைகளை விரைவில் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதியை பெற்று கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளேன்.நாட்டில் பொருளாதார பிரச்சிணை முழுமையாக தீர்க்கப்படவில்லை. இதை தீர்ப்பதற்கு நாங்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கும் தீரமானங்கள் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளரகள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.