கொழும்பின் பல பகுதிகளில் ,நாளை 20 மணித்தியாள நீர் விநியோக  தடை

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளை (13) காலை 10:00 மணி முதல் புதன்கிழமை (14) காலை 6:00 மணி வரை 20 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பொரள்ளை கனத்த வீதி நீரேற்று நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கோரக்கபிட்டிய ,சித்தமுல்ல ,ஏரவ்வுள்ள ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, பொகுந்தர வீதி மற்றும் அண்டிய அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன