கிழக்கு மாகாணத்தில் குறைந்த மதிப்பெண்களைக் கொண்ட கல்வி வலயங்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் 52 வீதத்திற்கும்  குறைந்த மதிப்பெண்களைக் கொண்ட கல்வி வலயங்களின் கல்வி தரத்தை  உயர்த்துவதற்கான முன்மொழிவுகளை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மாகாண  பிரதம செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி வலய பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச கல்வி அதிகாரி ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த  கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில்  நேற்று (22) இடம் பெற்றது.

அனைத்து குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை 30 நாட்களுக்குள் மேற்கொள் ள்ளப்பட வேண்டும்.

நிதிக் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் குறித்த அறிக்கைகளை ஒப்படைத்து  கடுமையான நடவடிக்கை எடுத்தல்,

பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள  ஆசிரியர்களை பற்றாக்குறை காணப்படும் பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல்,

உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளின் பட்டியல்களை தயாரித்தல்,

பாடசாலையை அண்மித்த இடங்களில் போதைப்பொருள்  பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக விசேட கவனம் செலுத்துவதற்காக விசேட குழு வை  நியமித்தல்

மாணவர்களின் இடைவிலகளை தவிர்ப்பதற்காக விசேட செயற்திட்டம் முன்னெடுத்தல்,

கஷ்டப்பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் கல்வி திறனை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை களை முன்னெடுத்தல்

தூர பிரதேசங்களில் சேவையை மேற்கொள்ளும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அருகில் இருக்கும் பாடசாலைகளில் சேவையை மேற்கொள்ள  இடமாற்றம் செய்வதற்கான வசதிகளை உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன