காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: 3 நாட்கள் துக்க தினம்

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஜோர்டானிய அதிகாரிகள் மற்றும் லெபனானும் காசா மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாட்கள் துக்க தினம் அனுஸ்டிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

காசா மருத்துவமனை மீது செவ்வாய்க்கிழமை (17) இரவு இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் பலர் இடம்பெயர்ந்ததுடன் அவர்கள் தஞ்சம் அடைவதற்காக பாதுகாப்பான இடங்களை தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக அரபு நாடுகளும் ஹமாஸும் தெரிவித்துள்ளன. பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பு இலக்கு தவறிய ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. மருத்துவ மனை மீதான தாக்குதலை முற்றாக இஸ்ரேல் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன